Friday, July 22, 2011

அன்பென்ற மழையிலே அதிரூபன் தோன்றினானே



அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய் வந்தவன் மின்னினானே
விண்மீங்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ புகழ்மைந்தன் தோன்றினானே
கண்ணீரின் காயத்தை சென்னீரில் ஆற்றவே சிசுபாலன் தோன்றினானே

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே
போர்கொண்ட பூமியில் பூக்காடு காணவே புகழ்மைந்தன் தோன்றினானே
(புகழ்மைந்தன் தோன்றினானே)

கல்வாரி மலையிலே கல்லொன்று பூக்கவும் கருணைமகன் தோன்றினானே
நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும் ஒளியாகத் தோன்றினானே
இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே இறைபாலன் தோன்றினானே
முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே புவிராஜன் தோன்றினானே

(அன்பென்ற மழையிலே)
(அன்பென்ற மழையிலே)

Saturday, July 16, 2011

விழிகளில் ஒரு வானவில்.. இமைகளை தொட்டு பேசுதே..


விழிகளில் ஒரு வானவில்.. இமைகளை தொட்டு பேசுதே..
இது என்ன புது வானிலை.. மழை வெயில் தரும்..
உன்னிடம் பார்கிறேன்.. நான் பார்கிறேன்..
என் தாய்முகம் அன்பே..
உன்னிடம் தோற்கிறேன்.. நான் தோற்கிறேன்..
என்னகுமோ இங்கே..
முதன் முதலாய் மயங்குகிரேன்..
கண்ணாடி போல தோன்றினாய்
என் முன் என்னை காட்டினாய்
கனா எங்கும் வினா..

விழிகளில் ஒரு வானவில்.. இமைகளை தொட்டு பேசுதே..
இது என்ன புது வானிலை.. மழை வெயில் தரும்..

நீ வந்தாய் என் வாழ்விலே
பூ பூத்தாய் என் வேரிலே..
நாளையே நீ போகலாம்..
என் ஞாபகம் நீ ஆகலாம்..
தேர் சென்ற பின்னாலே வீதி என்னாகுமோ..
யார் இவன்.. யார் இவன்..
ஓர் மாயவன் மேயானவன் அன்பில்..
யார் இவன்.. யார் இவன்..
நான் நேசிக்கும் கண்ணீர் இவன் நெஞ்சில்
இனம் புரியா உறவிதுவூ..
என் தேதி பூத்த பூவிது
என் நெஞ்சில் வாசம் தூவுது..
மனம் எங்கும் மனம்..

அழகே சுகமா உன் கோபங்கள் சுகமா



அழகே சுகமா உன் கோவங்கள் சுகமா
அழகே சுகமா உன் கோவங்கள் சுகமா
அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா
அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா

தலைவா சுகமா சுகமா
உன் தனிமை சுகமா சுகமா
வீடு வாசல் சுகமா
உன் வீட்டு தோட்டம் சுகமா
பூக்கள் எல்லாம் சுகமா
உன் பொய்கள் எல்லாம் சுகமா
அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா

அழகே உன்னை பிரிந்தேன் என் அறிவில் ஒன்றை இழந்தேன்
வெளியே அழுதால் வெட்கம் என்று விளக்கை அணைத்து அழுதேன்
வெளியே அழுதால் வெட்கம் என்று விளக்கை அணைத்து அழுதேன்
அன்பே உன்னை வெறுத்தேன் என் அறிவை நானே எறித்தேன்
உறவின் பெருமை கண்டு உயிரில் பாதி குறைந்தேன்
உறவின் பெருமை கண்டு உயிரில் பாதி குறைந்தேன்
பழைய மாலையில் புதிய பூக்கள்தான் சேராதா
பழைய தாலியில் புதிய முடிச்சுகள் போடாதா
வாழ்க்கை ஓர் வட்டம்போலே முடிந்த இடத்தில் தொடங்காதா
வாழ்க்கை ஓர் வட்டம்போலே முடிந்த இடத்தில் தொடங்காதா
அழகே சுகமா உன் கோபங்கள் சுகமா

Thursday, July 14, 2011

பெண்ணின் தவிப்பு தொடர்ந்துவிடும்



கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லைத் தொடவில்லை
ஏனோ விட இன்னும் வரவில்லை
ஐயர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்த்தை வருமா?
ஐயர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்த்தை வருமா?
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா
தென்றல் தொட்டதும் மொட்டு வெடித்தால்
கொடிகள் என்ன குற்றம் சொல்லுமா
கொல்லைத் துளசி எல்லை கடந்தால்
வேதஞ் சொன்ன சட்டங்கள் விட்டுவிடுமா
வானுக்கு எல்லை யார் போட்டது
வாழ்க்கைக்கு எல்லை நாம் போட்டது
சாஸ்திரம் தாண்டி தப்பிச் செல்வதேது
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா
குருவே குருவே
இதிலென்ன அதிசயம் இளமையின் அவசியம்
இனியென்ன ரகசியம் இவள் மனம் புரியலையா
ஆணின் தவிப்பு அடங்கிவிடும்
பெண்ணின் தவிப்பு தொடர்ந்துவிடும்
உள்ளமென்பது உள்ள வரைக்கும்
இன்ப துன்பம் எல்லாமே இருவருக்கும்
என் உள்ளே ஏதோ உண்டானது
பெண் உள்ளம் இன்று ரெண்டானது
ரெண்டா ஏது ஒன்றுபட்டபோது
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லைத் தொடவில்லை
ஏனோ விட இன்னும் வரவில்லை
ஐயர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்த்தை வருமா?
ஐயர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்த்தை வருமா?
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா

என் மனதை திறந்தால் நீ இருப்பாய்


என் மேல் விழுந்த மழை துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய் ?
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?

என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
உடம்பில் உறைகின்ற ஓர் உயிர் போல்
உனக்குள் தானே நான் இருந்தேன்

(என் மேல் விழுந்த...)

மண்ணை திறந்தால் நீர் இருக்கும்
என் மனதை திறந்தால் நீ இருப்பாய்
ஒளியை திறந்தால் இசை இருக்கும்
என் உயிரை திறந்தால் நீ இருப்பாய்
வானம் திறந்தால் மழை இருக்கும்
என் வயதை திறந்தால் நீ இருப்பாய்
இரவை திறந்தால் பகல் இருக்கும்
என் இமையை திறந்தால் நீ இருப்பாய்

(என் மேல் விழுந்த ...)

இலையும் மலரும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
அலையும் கரையும் உரசுகையில்
பேசும் பாஷை பேசிடுமோ
மண்ணும் விண்ணும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
பார்வை ரெண்டும் பேசிகொண்டால்
பாஷை ஊமை ஆகிவிடுமோ

(என் மேல் விழுந்த...)

Monday, July 11, 2011

உயிரின் தேடல் கடைசியில் உனைக்காண்பது


கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன்
விரல் தொடும் தூரத்திலே வெண்ணிலவு கண்டுகொண்டேன்
வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தில் விழுந்து நிறைந்தால் வழிந்தால் மகிழ்ச்சி
வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தை உடைத்தால் உயிரை உடைப்பாள் ஒருத்தி
என் கண் பார்த்தது என் கை சேருமோ
கை சேராமலே கண்ணீர் சேருமோ
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன்

மலர்மஞ்சம் விழி கெஞ்சும் மனம் அஞ்சுமல்லவா
உயிர் மிஞ்சும் இவள் நெஞ்சம் உன் தஞ்சமல்லவா
உன் தனிமைக் கதவின் தாள் நீக்கவா
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன்

மேகம் திறந்தால் அதற்குள் உன் முகம் பார்க்கிறேன்
பூக்கள் திறந்தால் அதற்குள் உன் குரல் கேட்கிறேன்
கண்களைத் திறந்துன் கனவுகள் வளர்க்கும்
காதலின் விரல்கள் கல்லையும் திறக்கும்
உன்னைத் தேடியே இனி எனது பயணமோ
எந்தன் சாலைகள் உன் வீட்டில் முடியுமோ
ஏ கனவு மங்கையே உனது மனது எனது மனதில் இணையுமோ
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன்
விரல் தொடும் தூரத்திலே வெண்ணிலவு கண்டுகொண்டேன்

ஆ…
நதியின் தேடல் கடைசியில் கடல் காண்பது
உயிரின் தேடல் கடைசியில் உனைக்காண்பது
கடல் கொண்ட நதியோ முகம் தனை இழக்கும்
நான் உன்னில் கலந்தால் புது முகம் கிடைக்கும்
நட்சத்திரங்களை ஒரு நாரில் கட்டுவேன்
எந்த நேரமும் உன் கதவு தட்டுவேன்
ஏ காதல் தேவனே எனது இமையில் உனது விழிகள் மூடுவேன்
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்…கண்டுகொண்டேன​் கண்டுகொண்டேன்
காதல் முகம் கண்டுகொண்டேன்…காதல் முகம் கண்டுகொண்டேன்
விரல் தொடும் தூரத்திலே…விரல் தொடும் தூரத்திலே
வெண்ணிலவு கண்டுகொண்டேன்…கண்டுகொண்டேன​் கண்டுகொண்டேன்…காதல் முகம் கண்டுகொண்டேன்

ஆண் நெஞ்சம் எப்போதும் ஒரு ஊமைதானடி..

இந்த காதல் என்ன, ஒரு நடைவண்டியா,
நான் விழுந்தாலும் மீண்டும் எழ....
இரு கண்ணை கட்டி ஒரு காட்டுக்குள்ளே
என்னை விட்டாயே நான் எங்கே செல்ல....
ஆண் நெஞ்சம் எப்போதும் ஒரு ஊமைதானடி..
அது தெருவின் ஓரம் நிற்கும் ஒரு பழுதான தேரடி...!


Sunday, July 10, 2011

நிலவு தூங்கும் நேரம் - Kunguma Chimizh

இது ஒரு காதல்..மயக்கம் அழகிய கண்களில்… துடிக்கும்

காதல்…மயக்கம் அழகிய கண்கள்…துடிக்கும்

இதுஒரு காதல்..மயக்கம் அழகிய கண்களில்… துடிக்கும்

ஆலிங்கணங்கள் பரவசம் இங்கு அனுமதி இலவசம்

தன்னை மறந்த அனுபவம் ரெண்டு கண்ணில் அபினயம்

தேகம் கொஞ்சம் சிலிர்கின்றதே

மேகம் ..போல மிதக்கின்றதே

மெழுகாய் உருகும் அழகே

நான் தூங்கும் வேளை கனவுகள் தொல்லை

நான் தூங்க வில்லை கனவுகள் இல்லை

மெய்யா பொய்யா… மெய்ய்தான் அய்யா

நான் தூங்கவில்லை கனவுகள் இல்லை

மெய்யா பொய்யா… மெய்ய்தான் அய்யா

பாதத்தில் வீழ்ந்த பௌர்ணமியே

மார்பினை தீண்டு மார்கழியே

பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்

என்பெண்மை பின்னோடும் முன்னோடும் நின்றாடும்
கண்வார்த்தை தானே நான் சொல்லும் வேதம்

உன்பேரைச் சொன்னால் ஆயுழும் கூடும்

போதும் கேலி ..வா வா தேவி.

உன்பேரைச் சொன்னால் ஆயுழும் கூடும்

போதும் கேலி ..வா வா தேவி

கண்களில் ஒன்று பார்கின்றது

உன்னிடம் தேதி கேட்கின்றது

மாலை வழங்கும் நேரம் நெருங்கும்

னான் வந்து பெண்பார்க்க

னீ அன்று மண்பார்க்க



பூங்காவியம்... - Karpoora Mulla

Song : Poongaviyam
Movie : Karpoora Mullai
Singer : K.J.Yesudas
Year : 1991




பூங்காவியம் பேசும் ஓவியம்

பூங்காவியம் பேசும் ஓவியம்
ஆணிப் பொன் தேரோ ஆரிரோ ஆரோ
வெள்ளிப் பன்னீரோ ஆரிரோ ஆரோ
பூங்காவியம் பேசும் ஓவியம்

பாட்டுதான் தாலாட்டுதான்
கேட்கக் கூடும் என நாளும்
வாடினாள் போராடினாள்
வண்ணத்தோகை நெடுங்காலம்
தாய் முகம் தரிசனம் தரும் நாள் இது
சேய் மனம் உறவெனும் கடல் நீந்துது
பாசம் மீறும்போது பேசும் வார்த்தை ஏது
பாசம் மீறும்போது பேசும் வார்த்தை ஏது
ஓஹ... ஒ...
மயக்கத்தில் மனம் சேர்ந்தது

பூங்காவியம் பேசும் ஓவியம்
ஆணிப் பொன் தேரோ ஆரிரோ ஆரோ
வெள்ளிப் பன்னீரோ ஆரிரோ ஆரோ

யார் மகள் இப் பூமகள்
ஏது இனி இந்தக் கேள்வி
கூட்டிலே தாய் வீட்டிலே
வாழும் இனி இந்தக் குருவி
பாடலாம் தினம் தினம் புது கீர்த்தனம்
நாளெல்லாம் தளிர் விடும் இந்தப் பூவனம்
வானம் பூமி வாழ்த்தும்
வாடைக் காற்றும் போற்றும்
வானம் பூமி வாழ்த்தும்
வாடைக் காற்றும் போற்றும்
ஓஹ... ஒ...
புதுக்கதை அரங்கேறிடும்

பூங்காவியம் பேசும் ஓவியம்

பூங்காவியம் பேசும் ஓவியம்
ஆணிப் பொன் தேரோ ஆரிரோ ஆரோ
வெள்ளிப் பன்னீரோ ஆரிரோ ஆரோ
பூங்காவியம் பேசும் ஓவியம்

Friday, July 8, 2011

நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு

நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு, நினைவினை கடந்துவிடு
நெஞ்சே நெஞ்சே உறங்கிவிடு, நிஜங்களை துறந்துவிடு
கண்களை விற்றுத்தான் ஓவியமா
வெந்நீரில் மீன்கள் தூங்குமா
கண்ணீரில் காதல் வாழுமா
நெஞ்சே..

பெண்ணே பெண்ணே உன் வளையல்
எனக்கொரு விளங்கல்லவோ
காற்றுக்கு சிறை என்னவோ
தன்மானத்தின் தலையை விற்று
காதலின் வால் வாங்கவோ
கண் மூடி நான் வாழவோ
உன்னை என்னி முள் விரித்து
படுக்கவும் பழகிக்கொண்டேன்
என்மேல் யாரும் கல் எறிந்தால்
சிரிக்கவும் பழகிக்கொண்டேன்
உள்ளத்தை மறைத்தேன்
உயிர்வலி பொறுத்தேன்
என் சுயத்தை எதுவோ சுட்டதடி வந்தேன்

நெஞ்சே நெஞ்சே நெறுங்கிவிடு, நிகழ்ந்ததை மறந்துவிடு
நெஞ்சே நெஞ்சே நெகிழ்ந்துவிடு, நிஜங்களில் கலந்துவிடு
கட்டி வைத்த காற்றே வந்துவிடு
கைகள் ரெண்டை ஏந்தினேன்
காதல் பிச்சை கேட்கிறேன் ம்ம்ம்ம்
நெஞ்சே நெஞ்சே..நெஞ்சே நெஞ்சே..நெஞ்சே நெஞ்சே..

அன்பே அன்பே நீ பிரிந்தால்
கண்களில் மழை வருமே
காற்றினை கை விடுமே
விதை அழிந்து செடி வருமே
சிப்பிகள் உடைத்த பின்னே
முத்துக்கள் கைவருமே
காதல் ராஜா ஒன்றை கொடுத்தால்
இன்னொன்றில் உயிர் வருமே
உன்னை கொஞ்சம் விட்டுக் கொடுத்தால்
காதலில் சுகம் வருமே
அஸ்தமனமெல்லாம் நிறந்தறம் அல்ல
மேற்கில் விதைத்தால் கிழக்கினில் முளைக்கும்
நெஞ்சே நெஞ்சே..

list of songs

'Neeyum Bommai Naanum Bommai' Song From Tamil Movie Bommai (1) Anbendra Mazhaiyile lyrics in tamil (1) BHARATHWAJ (1) Birds singing (1) Chinna Chinna Aasai | Roja | AR.Rahman [HD] (1) Deiva Thirumagan lyrics tamil (1) Eeramaana Rojaveh (1) hits (1) http://healthy-life-4u.blogspot.com/ (1) K.S.CHITRA (1) Kannan vandhu - Harmonize Projekt 2 /// soul ......... touch......... (1) Karpoora Mullai (1) KARTHIK (1) KOUSALYA (1) love hits (1) May Matham - En mel vizhuntha (1) Meendum Kokila (1981) (1) melody (1) Music: S.Balachandhar (1) O Butterfly Butterfly - Sad - Meera - tamil lyrics (1) OLD SOUL HITS (1) Oru Poo Eazhudum Kavithai - Pooveli1999 (1) P (1) Poongaviyam (1) POOVELI (1) Singer: K.J.Yesudas (1) soul music (4) Soul Touch 100 % (8) Soul Touch 100 % K.J.Yesudas (1) tamil (1) tamil melody hits (4) Tamil Movie Song - Bharathi - Nirpathuve Nadapathuve Parapathuve (1) The sound of rain w/o music (1) This Is Tamil Debut Song For K.J.Yesudas. Relesed In 1963. My Favourite One. (1) Thulli thirintha kaalam singers: Actor vijay (1) unni krishnan (1) UNNI KRISHNAN (1) Uravugal thudarkathai - Harmonize Projekt 2 (1) Vellai pookal white flowers Kannathil muthamital AR.Rahman Best music One drop videoclip video cliphigh quality Vellai pookal HD vellai pookal (1) அல்லி ரானி கன்னுரங்கு-kadhalan Kollayile (1) அழகே சுகமா ? உன் கோபங்கள் சுகமா? (1) ஆஹா - நல்லவலே அன்பே உன்னால் தான் (1) காற்றில் வரும் கீதமே (1)