![]() |
| பாடியவர்: மின்மினி |
படம்: ரோஜா
பாடியவர: மின்மினி
இசை: A.R.ரஹ்மான்
சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை
வெண்ணிலவைத் தொட்டு முத்தமிட ஆசை
என்ன இந்த பூமி சுற்றி வர ஆசை
(சின்ன சின்ன ஆசை)
மல்லிகைப் பூவாய் மாறி விட ஆசை
தென்றலைக் கண்டு மாலையிட ஆசை
![]() |
| பாடியவர்: மின்மினி |
சோகங்களையெல்லாம் விட்டு விட ஆசை
கார்குழலில் உலகை கட்டி விட ஆசை
(சின்ன சின்ன ஆசை)
சேற்று வயலாடி நாற்று நட ஆசை
மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை
வானவில்லை கொஞ்சம் உடுத்திக் கொள்ள ஆசை
பனித்துளிக்குள் நானும் படுத்துக் கொள்ள ஆசை
சித்திரத்து மேலே சேலை கட்ட ஆசை
(சின்ன சின்ன ஆசை)
_______________________________________


No comments:
Post a Comment